பாற்பண்ணை மறு அறிவித்தல் வரை முடக்கம்; 2 பாடசாலைகள் இயங்காது: யாழ் கொரோனா தடுப்பு செயலணி முடிவு!

Date:

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளதால், குறித்த பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள்ளே செல்வதும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இதன் காரனமாக திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயம் மற்றும் திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரி என்பன மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாகவும், குறித்த பகுதியில் இருந்து அத்தியாவசிய சேவை மற்றும் தொழில் நிமிர்த்தம் வெளியில் செல்பவர்கள் அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து பயணிக்க முடியும் என்வும் கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இந்த கூட்டத்தின் போதே இவ்வாறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மார்ச் மாதம் 300 மேற்பட்டோருக்கு கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று 143 பேருக்கு தோற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஒரிரு நாள்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து குறைவடையும் என சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர்.

சுயதனிமைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நேற்றிவரை 244 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார பிரிவுகளில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.

திருநெல்வேலி பாற்பண்ணை பிரதேசம் கண்காணிப்பு வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அபாய இடர் வலயமாக திருநெல்வேலி பிரதேசம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் முத்துத்தம்பி வித்தியாலயம் மற்றும் பரமேஸ்வரா கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் பேசி முடிவுக்கு வந்துள்ளோம்.

அத்துடன், பாற்பண்ணை கிராம மக்கள் வெளியில் நடமாடுவதை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளோம். அத்தியாவசிய சேவை, தொழில் நிமிர்த்தம் வெளியில் வருகை தருவோர் அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து வெளியேற முடியும்.

சிறப்புக் காரணங்களுக்காக கிராமத்திலிருந்து வெளியில் செல்வோர் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் விண்ணப்பித்து அனுமதி கிடைத்தால் பயணிக்க முடியும்.

யாழ்ப்பாணம் மாநகர், திருநெல்வேலி நகர் கடைகளை மூடி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள், தொற்று உறுதி செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டால் பாடசாலைக்குச் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்