அரச பின்னணியில் நல்லூரில் மேடையமைத்திருந்த குழு அடுத்த திட்டத்திற்கு ரெடி!

Date:

முன்னாள் ரௌடிகள் உள்ளிட்ட தரப்பினர் சிலர் இராணுவத்தின் ஏற்பாட்டிலேயே, நல்லூரடியில் பந்தல் அமைத்து சில நாட்கள் உட்கார்ந்திருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

உழைப்பு, பிழைப்பை விட்டு விட்டு மேடை போட்டு உட்கார்ந்திருந்தால் குடும்பங்களின் அன்றாட செலவிற்கு என்ன ஆவது?, யார் பணம் தந்து அவர்களை இயக்குகிறார்கள் என சமூக ஊடகங்களில் பரவலாக கேள்விகள் எழுப்பப்பட்ட போதும், அந்த குழுவினரால் அதற்கு பதலளிக்க முடியவில்லை. மாறாக, தம்மை பொதுமக்களோ, ஊடகங்ளோ நெருங்கினால் பதற்றமடைந்து, சண்டித்தனத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தை சூழ பொலிசாரும், புலனாய்வாளர்களும் கண்ணிமைக்காமல் காவல்காத்தனர்.

இராணுவம்தான் எனது உறவை கடத்தியது என ஒரு பெண் சொல்வதும், அப்படி சொல்லக்கூடாதென ஏற்பாட்டாளர் சொல்லிக் கொடுக்கும் வீடியோவும் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில். இதேகுழுவினரை முன்னிலைப்படுத்தி இன்னொரு நகர்வு யாழில் நடக்கவுள்ளதை தமிழ்பக்கம் அறிந்தது.

நலலூரில் மேடை போட்டு அமர்ந்த போது முன்வைத்த சுலோகங்களை முன்வைத்து, கையெழுத்து போராட்டமொன்றை நடத்தும்படி அவர்கள் மீள களமிறக்கப்படவுள்ளதை தமிழ்பக்கம் அறிந்தது.

ஏற்பாட்டாளர் தரப்பில் உள்ள ஒருவர், இந்த தகவலை தெரிவித்தார்.

இதுதவிர, வேறும் சில முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். வழக்கம் போல, இதன் பின்னணி ஏற்பட்டாளர்களோ, ஆட்களை திரட்டி தருவதாக அவர் குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்...

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மேலும் மதிப்பிழந்தது

இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (24) அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும்...

**நெல் கொள்முதல் விலையை உயர்த்த எந்தத் தீர்மானமும் இல்லை**

  நெல் சந்தைப்படுத்தல் சபை (PMB) மூலம் நெல் கொள்முதல் விலையை உயர்த்துவதற்குப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்