29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் காலத்தில் சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கிலிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவினை கொழும்பு பிரதம நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று பிறப்பித்தார்.

2010 – 2014 வரை வர்த்தக அமைச்சராக செயற்பட்ட போது ச.தொ.ச நிறுவனத்தின் 153 ஊழியர்களை அவருடைய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதோடு, அதனால் அரசாங்கத்திற்கு 4 கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுடன் ஏனைய பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த, சதொசவின் முன்னாள் தலைவர் இராஜ் பிரியந்த பெர்னாண்டோ மற்றும் மொஹமட் சர்கர் ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment