வடிகான்களுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள கடைத் தொகுதியினால் மக்கள் பலதரப்பட்ட அசௌகரிய

Date:

களுவாஞ்சிகு பொதுச் சந்தைக்கு முன்னால்  வடிகான்களுக்கு மேல்  அமைக்கப்பட்டுள்ள கடைத் தொகுதியினால் மக்கள் பலதரப்பட்ட அசௌகரியங்களை பல காலமாக எதிர் நேக்கிவருவதாகவும் சட்டத்திற்கு  முரணான வகையில் அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்கவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

இவ்வாறு வடிகானுக்கு மேல் கடைத் தொகுதியானது  அமைக்கப்பட்டமையால் வீதியானது  அகலம் குறைந்து நெருசல் நிலை உருவாகியுள்ளது. குறித்த வீதியானது பொதுச் சந்தை, வைத்தியசாலை, பாடசாலை, போன்ற பல அரச நிறுவனங்களை மையப்படுத்தியதாக அமைப்பெற்ற  கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வீதியாகும்
இதனால்  பொதுச் சந்தைக்கு பொருட்களை வாங்கவரும் நுகர்வோர், பொருட்களை விற்பனைக்காக கொண்டுவரும் வியாபாரிகள் வாகனங்களை நிறுத்தி அபொருட்களை ஏற்றி இறக்குவதிலும் பலத்த சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்    மற்றும் குறித்த வீதியால் பிரயாணங்களை மேற்கொள்ளும் பிரயாணிகள், மாணவர், நோயாளர்கள், என பலரும் பலத்த சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.  படுவான்கரை பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களை அவரமாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரும் நோயாளர்  காவுவண்டிகளும் அவசர போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலையும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
எல்லாவற்றிக்கும் மேலாக  வெள்ள அனர்த்தங்களின் போது நீர்வடிந்தோட முடியாமல் வடிகான்கள் அடைக்கப்பட்டுள்ளது அடைக்கப்பட்டுள்ள வடிகான் அனது வெள்ளநீர் வடிந்தோடும்  பிரதான வடிகானாகும் இது தடைப்பட்டுள்ளமையால்  குறித்த பிரதேச மக்கள் வெள்ள பாரிய வெள்ள அனர்த்ததிற்கும் முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலையும் எதிர்காலத்தில் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் உண்டு.  மற்றும் வடிகான்களை துப்பரவு செய்யமுடியாத நிலை காணப்படுவதால்   டெங்கு நுளம்பு பரவும் அபாயமும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

முன்னர்   தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இக்  கடைத்தொகுதியானது தற்போது புதிதாக உறுதியான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு  மேற்குறித்த பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய  அபாயகரமான நிலமையில் அமையப்பெற்றுள்ள  சட்டத்திற்கு முரணான வகையில்  கடைகளை அமைப்பதற்கு அனுமதி கொடுத்தது யார்? என்ற கேள்வியினை பொது மக்கள் முன்வைக்கின்றனர். குறித்த விடயத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி, அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் போன்ற திணைக்களங்கள்   குறித்த விடயத்தில் கவனம் செலுத்தி குறித்த கடைத் தொகுதியை உடன் அகற்றுவதற்குரிய நடவடிக்கையை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்……
spot_imgspot_img

More like this
Related

உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண்

உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜைச் சேர்ந்​தவர் பல்​லவி சிங் ராஜ்புத். இவர்...

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலிப் நாணயத்தாள்களை வைத்திருந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்