இரத்தினக்கல் கனிய மண்களில் தங்கத் துகள்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி இரத்தினக்கல் கூட்டுத்தாபன காரியாலய அதிகாரிகள் இத்தகவல்களை தெரிவித்தனர்.
இரத்தினபுரியின் கிரியெல்லை மற்றும் `ஹெரனிவத்தை பிரதேசங்கள் இரத்தினக்கல் கனிய மண்களில் மேற்படி தங்கத் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை சேகரிப்பதில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் இரத்தினக்கல் தங்க ஆபரண சபைத் தலைவர் நேற்று தெரிவித்தார்.
சர்வதேச மட்டத்தில் இரத்தினபுரி மாவட்டம் இரத்தினக் கற்களிற்கு பெயர் பெற்றுள்ளது. தற்போது கனிய மண்களில் தங்கம் காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்பிரதேசங்களில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடும் தொழிலாளர்கள், இரத்தினக்கல் அகழ்வின் பின்னர் ஒதுக்கப்படும் மணலில் தங்கத் துகள்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் இப்பிரதேச மக்களிற்கு மேலதிக வருமானம் கிடைத்து வருவதாகவும் தெரிவித்தனர்.