சம்பள நிர்ணய சபையின் உத்தரவுப்படி, தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினசரி சம்பளமாக ரூ .1000 சம்பளம் வழங்கத் தயாராக இருப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
ரதெல்ல பகுதியில் ஊடகங்களுடன் பேசிய அவர், புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென தொழிற்சங்கங்கள் விரும்பினால், எதிர்க்க மாட்டோம் என்று கூறினார்.
சம்பள நிர்ணய சபையின் நிலைப்பாட்டிற்கமைய, தமது ஊழியர்களின் கொடுப்பனவுகளை உயர்த்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரச நிறுவனமான சம்பள நிர்ணய சபையினால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இணங்குவதாகவும், அதற்கேற்ப சம்பளத்தை அதிகரிப்பதாகவும் தெரிவித்தார்.
தொழில்துறையில் செயல்பாடுகள் மற்றும் பணியாளர்களை நிர்வகிக்க தோட்டக்காரர்களுக்கு தேவையான திறன்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
தொழிற்சங்கங்களிடையே கையெழுத்திடப்பட்ட ஒரு கூட்டு ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க தங்களுக்கு சட்டபூர்வமான கடமை இல்லை. தொழிற்சங்கங்கள் ஒரு புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பிப்பார்கள் என்றார் .