போலி ஆவணங்களை தயாரித்து வாகன விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் பிரதேசத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்தி செல்லப்படும் அல்லது திருடப்படும் வாகனங்களின் ஆரம்ப பதிவுக்கான புத்தகங்களை காப்புறுதி நிறுவனங்களில் கொள்வனவு செய்து அதைபோன்று தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன் சந்தேக நபர்கள் வாகனங்களை விற்பனை செய்திருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
2009இல் முல்லேரியாவில் வாகனமொன்று திருடப்பட்டதற்கும் இவர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். ஆனால் அந்த வாகனம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அதே இலக்கத்தகடு, பதிவு புத்தகத்துடன் ஒரு வாகனத்தை மேல் மாணத்தின் தெற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளனர்.