தடுப்பு மருந்து செலுத்தினல் மீண்டும் கொரோனா வருமா?… மரபணு மாறுமா: 5 சந்தேகங்களுக்கு உலக சுகாதார நிறுவனம் விளக்கம்!

Date:

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இலங்கையிலும், ஒகஸ்போர்ட்-அஸ்ராரெஜனிகா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. விரைவில் ஸ்புட்னிக் தடுப்பூசியும் வந்து சேரவுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்து குறித்த குழப்பங்களும், தயக்கங்களும் உலகளவில் பரவலாக நிலவி வருகின்றன.

எனவே கொரோனா தடுப்பு மருந்து குறித்த சந்தேகளுக்கு உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மையம் அளித்துள்ள விளக்கங்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு மருந்து முற்றிலுமாக கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்குமா? தடுப்பு மருந்தைச் செலுத்திய பிறகும் கொரோனா வருமா?

தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொண்டால் நீங்கள் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்படுவது நிச்சயம் தடுக்கப்படும். ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலமும் வித்தியாசமானது. தடுப்பு மருந்தானது கொரோனா வைரஸிலிருந்து உங்களுக்கு 100% பாதுகாப்பை அளிக்கும் என்று கூற முடியாது. ஆனால், கொரோனா வைரஸை எதிர்த்துப் போரிடுவதற்கான அனைத்து சக்திகளையும் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வழங்கும் என்பது உறுதி.

அடுத்தது கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொண்டவர்களில் 5% பேருக்குத் தொற்று வரலாம். அதற்கான காரணம் அந்தக் குறிப்பிட்ட நபர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் உருவாகாமல் இருக்கலாம். அல்லது அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். கொரோனா வைரஸ் தன்னை வெளிப்படுத்த எடுத்துக்கொண்ட காலகட்டத்தில் அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்படும்.

அத்துடன் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட பிறகும் சில நாட்களுக்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது, சமூக இடைவெளி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனென்றால் கொரோனா தடுப்பு மருந்து நமது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்கு சில காலம் எடுத்துக்கொள்ளும். நாமும் அதற்கு அனுமதிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசிகளால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன?

கொரோனா தடுப்பூசி மட்டுமல்ல, நம் உடலில் செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அந்தவகையில் கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொண்டவர்களுக்கு இலேசான காய்ச்சல், ஊசி செலுத்திய இடத்தில் வலி, உடல் வலி, சளி, தலைவலி ஆகியவை வரலாம்.

கருத்தரிக்க விரும்புகிறவர்களும், கர்ப்பிணிகளும், குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளலாமா?

கொரோனா தடுப்பு மருந்துகளால் கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்து ஏற்படுமா? என்று கேட்டால், எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி அது உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் கருத்தரிப்பு காலத்தில் பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ( இணை நோயும் இருப்பின்) ஏற்படுவது சற்று ஆபத்தானதுதான். ஆகவே சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்த ஆலோசித்துக் கொள்ளலாம்.

அவ்வாறே குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திய பிறகு குழந்தைகளுக்குப் பாலூட்டுவதில் சிக்கல் ஏற்படும் என்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் தாய்மார்கள் இது தொடர்பான மருத்துவர்களை அணுகி ஆலோசித்த பிறகு கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொள்ளலாம்.

கொரோனா தடுப்பு மருந்துகளால் நமது உடலின் மரபணுவில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

நிச்சயமாக இல்லை. கொரோனா தடுப்பு மருந்து நமது உடலின் மரபணுவில் எந்த மாற்றத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவை நம் உடலில் சென்ற பிறகு கொரோனா வைரஸுக்கு எதிராக இயற்கையாக உள்ள நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் பணியையே பிரதானமாகச் செய்கின்றன.

நான் ஏற்கெனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுவிட்டேன். நான் கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொள்ள வேண்டுமா?

நிச்சயமாக நீங்கள் கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நீங்கள் மீண்டும் கொரோனாவினால் பாதிக்கப்படாமல் எவ்வளவு காலம் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்பதை மருத்துவ நிபுணர்கள் இதுவரை கணிக்கவில்லை. எனவே நீங்கள் தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொள்வது நல்லது.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்