தனது அறிமுக போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார் பதும் நிஷங்க.
இலங்கை அணி சார்பில் அறிமுக டெஸ்டில் சதம் அடித்த 4வது வீரர் பதும் நிஷங்க ஆவார். எனினும், இதற்கு முதல் சதம் அடித்த மூவரும் இலங்கையிலேயே சதம் அடித்தனர். நிஷங்கவே வெளிநாட்டில் சதம் அடித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான முதலாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் பதும் நிஷங்க சதம் அடித்து அசத்தினார்.
22 வயதான பதும் நிஷங்கவின சதத்துடன் இலங்கை இரண்டாவது இன்னிங்சில் 476 ஓட்டங்களை குவித்தது.
இலங்கை சார்பில் அறிமுக டெஸ்டில் சதம் அடித்த வீரர்களின் விபரம் வருமாறு-
பிரண்டன் குருப்பு – 201 * (1987)
ரொமேஷ் கலுவிதரண – 132 * (1992)
திலான் சமரவீர – 103 * (2001)
பாதும் நிசங்க – 103
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1