காதல் பட நடிகர் பழைய ஆட்டோவிலிருந்து சடலமாக மீட்பு!

Date:

நடிகர் விருச்சிகாந்த் பழைய ஆட்டோ ஒன்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

காதல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி எப்படியாவது சினிமாவில் முன்னேறி விடலாம் என்ற கனவுடன் வந்தவர்தான் விருச்சிகாந்த். காதல் படத்தில் அவரது காட்சியே அனைவருக்கும் விருப்பமான காட்சிதான்.

நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அவர் சொன்ன வசனம் இன்று வரை சமூக வலைதளங்களில் பேமஸாக இருந்து வருகிறது. மேலும் பல மீம் கிரியேட்டர்ஸ்களும் அந்த வசனத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

காதல் படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்த விருச்சிகாந்த்துக்கு அதன்பிறகு படவாய்ப்புகளும் சின்ன சின்ன கதாபாத்திரங்களும் கூட கிடைக்கவில்லை. அவர் சினிமாவில் மட்டும் அந்த வசனத்தை சொல்லவில்லை. தன் வாழ்நாளிலும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்தது தான் அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிட்டதாம்.

சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு வந்த விருச்சிகாந்த் சமீபத்தில் ஒரு பழைய ஆட்டோ ஒன்றில் பிணமாக கிடந்து மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நடித்தால்இதனால் சினிமாவை நம்பி வரும் பலரும் சினிமா எல்லாருக்குமே எல்லாத்தையும் கொடுத்து விடாது என்பதை உணரவைக்கும் சம்பவமாக இது நிகழ்ந்துள்ளது. அனாதையாக இறந்து கிடக்கும் அவரது புகைப்படம் அனைவரையும் வருத்தப்பட வைத்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது

அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு...

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்