மன்னாரில் உருக்குலைந்த நிலையில் சடலம்: நடந்தது என்ன?

Date:

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கரிசல் புகையிரத பாதைக்கு சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மாடு தேடிச் சென்ற நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை(23) மாலை குறித்த சடலத்தை அவதானித்த நிலையில் குறித்த சடலம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் சடலத்தை அவதானித்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

-குறித்த சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லை.

குறித்த குறித்த நபர் சுமார் 20 நாட்களுக்கு முன் உயிரிழந்திருக்க முடியும் என எதிர் பார்க்கப்பட்டுள்ளதோடு,  சடலம் சிதைவடைந்து உருக்குலைந்த நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில் காணப்பட்டது.

இன்று புதன் கிழமை (24) காலை சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சடலத்திற்கு அருகில் பாதணியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

குழந்தைகள் வாழும் இடத்தில் மதுபானசாலையா?” – புங்குடுதீவு மாணவர்கள் போராட்டம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில்...

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று இறுதி நாள் முன்னெடுப்பு!

தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில்...

இனவாதம், மதவாதத்தை தூண்டி அரசியல் மாற்றத்துக்கு சதி – கவீந்திரன் கோடீஸ்வரன் எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்