26 C
Jaffna
January 20, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

யாழில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: இன்று 33 பேருக்கு தொற்று!

வடக்கு மாகாணத்தில் இன்று (24) மேலும் 44 பேருக்கு கோரோனா தொற்று உறுதியானது.

அவர்களில் 24 பேர் திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகளாவர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பபாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆய்வுகூடங்களில் 284 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் சுன்னாகம் பகுதிகளைச் சேர்ந்த இருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூர் திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் சந்தேகத்திற்கிடமான சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 24 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மரக்கறி வியாபாரிகள் மற்றும் சந்தைத் தொகுதியில் உள்ள கடைகளின் வியாபாரிகளும் அடங்குகின்றனர்.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மண்டைதீவுக்கு கடலுணவு வாங்குவதற்காகச் சென்றவர்.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 3 கைதிகளுக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மருத்துவ பீட மாணவன் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் புதுக்குடியிருப்பிலும் இருவர் மல்லாவியிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.

கிளிநொச்சி பளையில் 4 பேருக்கு கோரோனா வைரஸ் தோற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் நால்வரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

வவுனியா பொது வைத்தியசாலையில் இரண்டு பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றையவர் ஆடைத்தொழிற்சாலையை சேர்ந்தவர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil

UPDATE: மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு!

Pagetamil

மன்னார் நீதிமன்ற வாயிலில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் காயம்: உயிலங்குளம் இரட்டைக்கொலைக்கு பழிக்குப்பழியா?

Pagetamil

Leave a Comment