ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் வகையில் காணி,பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என தேசிய மரபுரிமைகள், கலைக்கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார மட்டத்தில் பல சவால்கள் தோற்றம் பெற்றுள்ளன. மக்களின் வாழ்க்கை செலவுகளும் அதிகரித்துள்ளன. இவ்வாறான நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்துவது பொருத்தமாற்றதாகும்.
மாகாண சபை முறைமை இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பிற்பட்ட காலத்தில் அவை பல முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளன.
நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை திட்டமிட்ட வகையில் பிற்போட்டது. மாகாண சபைகளின் நிர்வாகம் ஜனாதிபதியின் பிரதிநிதிகள் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது மாகாண சபைகளின் நிர்வாகம் ஆளுநர்களினால் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகிறது.
மாகாண சபை தேர்தல் அவசியமா இல்லையா என்பதில் மக்களின் அபிப்ராயத்தை பெற்றுக் கொள்வது அவசியாகும் என்பதை தெரிவித்துள்ளோம்.
மாகாண சபை முறைமை வீண் செலவுகளை ஏற்படுத்தும் ஒரு முறைமையாக காணப்படுகிறது என்பதே பெரும்பாலான மக்களின் அபிப்ராயமாக கணப்படுகிறது. மாகாண சபை விவகாரத்தில் இந்தியாவின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது அவசியம் என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது முற்றிலும் தவறானதொரு கருத்தாகும்.
நாட்டின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில் இந்தியாவின் ஆலோசனைகளை பெறுவது அவசியமற்றது. நாட்டு மக்களின் அபிப்ராயததுக்கு அமையவே அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியும்.
மாகாண சபை விவகார்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவது அவசியமானதாகும். மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் வகையில் காணி, பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.