26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

தலைமன்னார் புகையிரத விபத்து ஏன் நடந்தது?: கடவை காப்பாளர்கள் சொல்லும் துயரக்கதை!

புகையிரதக் கடவை காப்பாளர்களது அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்து அவர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் றெகான் ராஜ்குமார் முல்லைத்தீவில் இன்று (23) நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 16 ஆம் திகதி தலைமன்னாரில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கும் அவனின் குடும்பத்திற்கும் அனுதாபத்தினை தெரிவிக்கின்றோம். இந்த விபத்தானது புகையிரத திணைக்களத்தின் முழுமையான பொறுப்புக்கூறலேயாகும்.

வடக்கு கிழக்கு எங்கம் புகையிரத கடவையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புகையிரத திணைக்களத்தின் நேர அட்டவணை வழங்கப்படுவதில்லை. புகையிரத சமிக்ஞையினை காண்பிக்கும் சிறப்பு, பச்சை நிற கொடிகள் வழங்கப்படவில்லை. 2013 ஆம் ஆண்டு 180 நாட்கள் அரச சேவையில் பணியாற்றி இருந்தால் சேவையில் நிரந்தரநியமனம் வழங்கப்படும் என்ற சட்டத்திற்கமைய உள்வாங்கப்பட்ட புகையிரத கடவை பணியாளர்களுக்கு நாளாந்தம் 250 ரூபாவினை பொலீஸ் திணைக்களம் ஊடாக வழங்கப்படுவதுடன் எமக்கான முழுமையான பராமரிப்பு, பொலீஸ் திணைக்களமே பொறுப்புக் கூறுகின்றன.

இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறும் சந்தர்பங்களில் மாத்திரம் பாதுகாப்பு கடவை ஊழியர்களை பாதிக்கும் விதத்தில் செயற்படாமல், சரியான விசாரணையினை மேற்கொள்ள வேண்டும். நீதி சரியான முறையில் நிலைநாட்டப்பட வேண்டும். கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தின் பின்னர் புகையிரதகடவை ஊழியர்கள் மனஅளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தலைமன்னார் பகுதியில் உள்ள இரண்டு கடவையில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் ஆறு பேர் தங்கள் பதவி விலகலை பொலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ளார்கள். இந்த கடவைக்கு சரியான பாதுகாப்பினை பொலீசாரே வழங்கவேண்டும். எதிர்வரும் மாகாணசபை தேர்தலுக்கு முன்னதாக எங்களுக்கு நிதந்தர தீர்வு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஜனாதிபதி செயலகத்துடன் கதைத்து வருகின்றோம்.

எதிர்வரும் நான்காம் மாதம் 15 ஆம் திகதி முன்னதாக நிரந்தர நியமனம் தொடர்பிலான நிலைப்பாட்டினை அரசு முன்வைக்க தவறும் பட்சத்தில் நாடு தழுவியரீதியில் உள்ள 2,064 புகையிரத கடவை ஊழியர்களும் ஒருமித்து இடைவிலகல் தொடர்பில் கலந்தாலோசித்து வருகின்றோம்.

வடக்கு கிழக்கில் 145 புகையிரத கடவைகளில் 450ற்கும் உட்பட்ட ஊழியர்கள் கடமையாற்றி வருகின்றார்கள். வடக்கு கிழக்கில் சுமார் 25 கடவைகள் முழுமையாக பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. காரணம் 250ரூபா சம்பளம், பொலீசாரின் அச்சுறுத்தல்கள், பழிவாங்கல்கள் போன்ற செயற்பாடுகளால் ஊழியர்கள் இடைவிலகியுள்ளார்கள்.

அரசினால் ஊழியர் நலன்சார்ந்த எந்த திட்டங்களும் முன்வைக்கப்படுவதில்லை. கொட்டகை வசதிஇல்லை, மின்சாரவசதி இல்லை, குடிநீர்வசதியில்லாத நிலையில் கடவைகள் பழுதடைந்துள்ள நிலையிலும் பெரும்பாலான இடங்களில் தடைகளே இல்லை. ஊழியர்களே தங்கள் கையினால் தான் சைகையினை காட்ட வேண்டும். புகையிரதம் வருகின்றது என்று சொன்னால் கண்ணால் கண்டு அல்லது அதன் சத்தத்தினை காதால் கேட்டுதான் பாதுகாப்பினை வழங்குகின்றோம்.

கடந்த ஏழு ஆண்டுகளாக இவ்வாறு பணியாற்றும் ஊழியர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மன்னார் விபத்து புகையிரத காப்பாளர் மீதுதான் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று ஊடகவியளாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில்,

இந்த குற்றச்சாட்டினை மறுக்கின்றோம். அன்று 2.20 மணிக்கு வரவேண்டிய புகையிரதம் 1.55 ற்கு வருகின்றது. அந்த இடத்தில் கொட்டகை இல்லாத காரணத்தினால் காவலாளி 50 மீற்றர் தூரத்தில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் தான் இருக்கின்றார். புகையிரத திணைக்களத்தின் முழுமையான தவறு அங்கு இடம்பெற்றுள்ளது. பேருந்தின் சாரதி அந்த இடத்தில் அவதானித்து சென்றிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment