கடந்த ஆண்டு நாட்டில் பதிவான ஒன்பது மணி நேர மின்வெட்டு காரணமாக ரூ .1,471 மில்லியன் இழப்பை சந்தித்ததாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இன்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, கடந்த வருடம் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட 9 மணித்தியால மின்வெட்டு காரணமாக 10.8 மில்லியன் யூனிட் மின்சாரம் நுகர்வுக்காக வெளியிடப்படவில்லை என்றார்.
நுகர்வோருக்கு உற்பத்தி செய்யப்படாத அல்லது வெளியிடப்படாத ஒவ்வொரு யூனிட் மின்சக்திக்கும் நாடு சுமார் ரூ .136 இழப்பை சந்திக்கிறது என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1