இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 268/8 என்ற ஸ்கோருடன், 99 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கையின் சுரங்க லக்மல் 5 விக்கெட் வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகளின் நடுவரிசையை உடைத்த போதும், சுழற்பந்து வீச்சாளரான சற்றே பருமனான வீரரான ராகீம் கார்ன்வால் அந்த அணியை தூக்கி நிறுத்தியுள்ளார். அவர் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
ஜோசுவா டா சில்வாவுடன் எட்டாவது விக்கெட்டுக்கு 90 ஓட்டங்களை அவர் பகிர்ந்தது, ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்துள்ளது. 2ஆம் நாள் ஆட்டம் முடிவதற்கு சிறிது முன்பாக, 124 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த விக்கெட் காப்பாளர் ஜோசுவா டா சில்வா ஆட்டமிழந்தார்.
சுரங்க லக்மல் 45 ஓட்டங்களிற்கு 5 விக்கெட், துஷ்மந்த சமீர 71 ஓட்டங்களிற்கு 2 விக்கெட் வீழ்த்தினர்.
போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இலங்கை முதலில் ஆடி, முதல் நாளிலேயே 70 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
புதிதாக நியமிக்கப்பட்ட மேற்கிந்தியத்தீவுகள் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் 27 ஓட்டங்களிற்கு 5 விக்கெட் வீழ்த்தினார்.
இலங்கை சார்பில், லஹிரு திரிமன்ன 70 ஓட்டங்களும், நிரோஷன் டிக்வெல்ல 32 ஓட்டங்களும் பெற்றனர்.
போட்டியின் மூன்றாம் நாள் இன்றாகும். இலங்கை நேரம் இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.