குருணாகலில் வாழைப்பழம் ஒன்றின் விலை விவகாரத்தினால் ஹோட்டல் ஊழியர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
அந்த ஹோட்டலில் வாழைப்பழமொன்றை கொள்வனவு செய்த வந்தவர், வாழைப்பழத்தின் விலை அதிகம் என ஹோட்டலில் குழப்பம் விளைவித்துள்ளார்.
அந்த வாழைப்பழத்தின் உண்மையான பெறுமதி 30 ரூபாயாகும். அதனையே ஹோட்டல் உரிமையாளரும் தெரிவித்துள்ளார். எனினும், விலையை ஏற்றுக்கொள்வதற்கு வந்தவர் மறுத்துவிட்டார்.
வாழைப்பழத்தின் விலையைக் கேட்டு கடுமையாக கோபமடைந்த அந்த நபர், வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்து வெளியே சென்றவர், வெற்று பியர் போத்தலுடன் மீண்டும் வந்துள்ளார். அங்கிருந்த உலோகப் பொருளொன்றில் போத்தலை உடைத்து ஹொட்டல் உரிமையாளரையும், ஊழியரையும் குத்தியுள்ளார்.
இருவரையும் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியவர், தொலைபேசி கூடாரமொன்றுக்குள் மறைந்துகொண்டுள்ளார்.
எனினும், அங்கிருந்தவர்கள் அவரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
போத்தல் குத்துக்கு இலக்கானவர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.