ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தது. ஆனால் சில திட்டமிடல் பிரச்சினைகள் காரணமாக ஜெனீவாவில் உள்ள அதிகாரிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
“வரைவுத் தீர்மானம் A / HRC / 46 / L.1 மீதான வாக்கெடுப்பு இப்போது 2021 மார்ச் 23 செவ்வாய்க்கிழமை நடைபெறும். மறுஆய்வு செய்யப்பட வேண்டிய முதல் தீர்மானம் பொதுவாக காலை 9.00க்குப் பிறகு வாக்கெடுப்பிற்கு விடப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தீர்மானத்தை ஆதரிக்க பெரும்பாலான நாடுகள் முடிவு செய்துள்ளதால், இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இந்தத் தீர்மானம் இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை குறித்த கண்காணிப்பு மற்றும் அறிக்கையை மேம்படுத்த மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தை கோருகிறது. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் முன்னேற்றம் உள்ளிட்ட விவகரத்தில் மனித உரிமைகள் பேரவையின் நாற்பத்தெட்டாவது அமர்வில் ஆணையாளர் வாய்வழி புதுப்பிப்பை வழங்க பிரேரணை கோருகிறது.
இந்தத் தீர்மானம் உயர் ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட சிறப்பு நடைமுறை ஆணையாளர்களை இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையுடனும், மேற்கூறிய நடவடிக்கைகளைச் செயல்படுத்த ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க ஊக்குவிக்கிறது.




