இன்றைய வானிலை!

Date:

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று : காங்கேசந்துறையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குமுதல் கிழக்குவரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும்.

காற்றின் வேகமானது 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும். புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: காங்கேசந்துறையிலிருந்து புத்தளம் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும்கொந்தளிப்பாகவும்காணப்படும்.

spot_imgspot_img

More like this
Related

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு! தியாகி...

அட்டாளைச்சேனையில் மாணவிகளை துன்புறுத்தியதாக விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...

ஆபாசக் காணொளிகளைக் காட்டி கலாசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்