யாழில் வர்ணம் பூசுபவரால் பரவிய கொரோனா: இன்றைய வடக்கு பரிசோதனை முடிவுகள்!

Date:

இன்று வட மாகாணத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் யாழ் மாட்டத்தில் 11 பேரும், மன்னாரில் 3 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று வடக்கில் 290 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

இதில் யாழ் மாவட்டத்தில் 13 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதில் இரண்டு பேர் வசாவளான் தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்தவர்கள்.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதில் 3 குடும்பங்களை சேர்ந்த 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

பளையை சேர்ந்த ஒருவர் இந்த வீடுகளிற்கு வர்ணம் பூச வந்து சென்றிருந்தார். அவருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில், இவர்களிற்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

இ.போ.சவின் கோண்டாவில் சாலை, சாரதிப்பயிற்சி பாடசாலையை சேர்ந்த ஒருவரும் தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றிற்குள்ளாகியுள்ளார். அவர்கள் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

மன்னார் மாவட்டத்தில் 3 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். அவர்கள் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்