குருணாகலில் ஹோட்டல் ஊழியர் ஒருவர் கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இன்னொருவர் காயமடைந்துள்ளார்.
குருணாகல் நகரத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு, நேற்று மாலை வந்துள்ள நபரொருவர் அதன் ஊழியர்கள் மீது கண்ணாடி போத்தலினால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
ஹோட்டலுக்கு வந்துள்ள சந்தேக நபர் ஹோட்டல் ஊழியர்களுடன் முரண்பட்டு, கண்ணாடி போத்தலினால் இரு ஊழியர்களை தாக்கியுள்ளார்.
காயமடைந்த ஊழியர்களிருவரும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கலேவெல தேவஹுவாவில் வசிக்கும் 58 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.




