ஆங் சான் சூகி மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டை சுமத்தும் இராணுவம்!

Date:

மியான்மார் இராணுவம் தான் நிகழ்த்திய ஆட்சிக் கவிழ்ப்பை நியாயப்படுத்தும் விதமாக ஆங் சான் சூசி மீது மேலும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இதன் மூலம் ஆட்சியிலிருந்து கீழிறக்கப்பட்ட ஆங் சான் சூசியை நீண்டகாலம் சிறையில் வைத்திருக்க அது எண்ணம் கொண்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான சட்டம் ஒன்றின்கீழ் சூசி அம்மையார் மீது இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. அதன்படி, சே பெய்ங் கன்ஸ்டிரக்‌ஷன் என்ற நிறுவனத்தின் தலைவரிட மிருந்து சூசி அம்மையார் அமெரிக்க டொலர் 737,000ஐ நான்கு தவணைகளாக 2018ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு ஏப்ரல் வரை பெற்றார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் அந்தக் கட்டுமான நிறுவனத் தலைவரின் வாக்குமூலம் அடங்கியதாகக் கூறப்படும் காணொளி ஒன்றையும் இராணுவம் வெளியிட்டுள்ளது. சூசி அம்மையாருக்கு பணம் கொடுத்ததை நேரில் பார்த்த சாட்சிகள் எவரும் இல்லை என்றும் கட்டுமான நிறுவனத் தலைவர் கூறுவதாக புளூம்பெர்க் செய்தித் தகவல் தெரிவிக்கிறது. சூசி அம்மையார் தமது சட்ட ஆலோசகர்களை சந்திக்கவும் இராணுவம் தடை விதித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

தேசிய உற்பத்தி திறன் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயம்!

2025/2026 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தி திறன் போட்டியில், கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா...

பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலைக்கான பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு...

இந்தியாவிற்கு ஆடு கடத்தியவர்கள் சிக்கினர்

இலங்கை கடற்படையினர் நேற்று (09) புத்தளம், உச்சமுனைக்கு அப்பால் உள்ள கடல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்