மேலும் 2 மரணங்கள்!

Date:

நாட்டில் இன்று (16) மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் மரணங்களின் எண்ணிக்கை 534ஆக உயர்ந்துள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 75 வயதான பெண் ஒருவர், கண்டி பொது வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (15) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த, 59 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவ பீட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (16) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், இருதய நோய் நிலை, கொவிட்-19 நிமோனியா நிலை, உயர் இரத்த அழுத்தம், உக்கிர நீரிழிவு நிலை மற்றும் சிறுநீரக நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியுடன் காட்டுக்குகைக்குள் குடித்தனம் நடத்திய ரவிச்சந்திரனுக்கு பிணை!

உடதும்பர காவல் பிரிவுக்கு உட்பட்ட கரம்பகேதிய பகுதியில், மலை உச்சியில் உள்ள...

அமெரிக்க தடையை தவிர்க்க ‘கள்ளக்காதல்’ உத்தியை பயன்படுத்தியதா சீனா?

ஒரு சீனப் பெண் தொழிலதிபருடன் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள என்விடியா தலைமைச்...

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் கள்ளக்காதல் விவகாரம்: சிங்கப்பூர் நிறுவனத்தின் விளக்கம்!

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் குறித்த சர்ச்சை தீவிரமடைந்து வரும் நிலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்