26.8 C
Jaffna
January 19, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

UPDATE: மன்னார் விபத்தில் 24 பேர் காயம்: வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு; பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்!

அனுராதபுரத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பேரூந்து தலைமன்னார் பியர் பகுதியில் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்ததுடன், பாடசாலை மாணவர்கள் பயணிகள் என 25 பேர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை(16) மதியம் மன்னாரில் இருந்து  பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, தலைமன்னார் பியர் பகுதியில் வைத்து மதியம் 2 மணியளவில் அனுராதபுரத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி விபத்திற்கு உள்ளாகியது.

விபத்தில் பேருந்து பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதோடு, பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் என சுமார் 25 பேர் வரை பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.

விபத்தில் 9 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பாடசாலை மாணவர்கள் பயணிகள் என 24 பேர் வரை பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

தற்போது காயமடைந்தவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து சம்பவத்தை அறிந்த மக்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை சூழ்ந்து கொண்டனர்.

இதே வேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உடனடியாக குருதி வழங்க விரும்புபவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முயன்ற நிலையில் மேற்படி விபத்து இடம் பெற்றுள்ள நிலையில் தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil

UPDATE: மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு!

Pagetamil

மன்னார் நீதிமன்ற வாயிலில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் காயம்: உயிலங்குளம் இரட்டைக்கொலைக்கு பழிக்குப்பழியா?

Pagetamil

இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது: ஆறு வார காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விவரங்கள்!

Pagetamil

Leave a Comment