முல்லைத்தீவு குருந்தூர் மலையடிவாரத்தில் 30 வருடங்களின் பின்னர் சிவராத்திரி!

Date:

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் 30 ஆண்டுகளின் பின்னர் சிவராத்திரி விழாவில் மக்கள் கலந்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இன்று (11) காலை குருந்தூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகள் நடைபெற்றுள்ளன

1990 ஆம் ஆண்டின் பின்னர் இந்த ஆண்டு ஸ்ரீ கோணமடு பிள்ளையார் ஆலயம் புனர் நிர்மானம் செய்யப்பட்டு இம்முறையே சிவராத்திரி வழிபாடுகள் சிறப்புற நடைபெற்றுள்ளன.

முள்ளியவளை, தண்ணீருற்று, குமுழமுனை கிராமங்களை சேர்ந்த மக்கள் பலர் வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளனர்.

சிவராத்திரி விழாவினை முன்னிட்டு அங்கு பொலீசாரும் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

spot_imgspot_img

More like this
Related

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்