ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கும், கர்தினல் மல்கம் ரஞ்சித்திற்குமிடையில் இன்று (10) பேராயர் இல்லத்தில் நடக்கவிருந்து சந்திப்பு கடைசி நிமிடத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய சந்திப்பிற்காக அனைத்து ஆயர்களிற்கு மேலதிகமாக, கட்டுவப்பிட்டிய மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உறவினர்களையும் கர்தினல் அழைத்துள்ளார்.
இது முன்னரே திட்டமிடப்பட்டிருக்கவில்லையென குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலைமை குறித்த அறிக்கையைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டபய தொலைபேசியில் கர்தினலை அழைத்து, கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ஆனால் கர்தினல் அதற்கு உடன்படவில்லை.
இதைத் தொடர்ந்து கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1