உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் வாள் மற்றும் குண்டுகள் உட்பட 6,000 ஆயுதங்களை இறக்குமதி செய்தது குறித்து விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் நிஷார ஜெயரத்ன இதனை தெரிவித்தார்.
ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
6,000 வாள்கள் குறித்து கர்தினல் மல்கம் ரஞ்சித் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பான விசாரணையில் இதனை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பான விவரங்களை தெரிவிக்க, கடந்த திங்களன்று சட்டமா அதிபர், கர்தினல் மல்கம் ரஞ்சித்தை சந்தித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1