ஹாலிவுட்டிற்கு செல்லும் வாய்ப்பை பெற்ற தமிழ் நடிகை‘

Date:

நடிகை நிவேதா பெத்துராஜ் நீண்ட நாட்களாக மேற்கொண்ட முயற்சிகள் கைகூடும் நேரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஹாலிவுட் படங்களில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறும் விதமாக இப்போது ஒரு பெரும் வாய்ப்பு வந்துள்ளது.

“ஒரு நாள் கூத்து’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான நிவேதா, அதன் பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். இடையிடையே ஆங்கிலப் படங்களிலும் நடிக்கும் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், “அயர்ன் மேன்’, “கப்டன் அமெரிக்கா’, “ஸ்பைடர்-மேன்’, “அவெஞ்சர்ஸ்’ படங்கள் இடம்பெறும் தொடரான மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்சின் புதிய ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்க இருப்பதாகத் தெரிகிறது. அந்தப் படத்தின் கடைசி சுற்று ஆடிஷனில் பங்கேற்க நிவேதாவுக்கு அழைப்பு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பேசிய நிவேதா, “இது என் நீண்ட நாள் கனவு. எப்படியாவது ஆடிஷனில் சிறப்பாக நடித்துக்காட்டி வாய்ப்பைப் பெற்றுவிடுவேன்’ என்றார்.

இந்த வாரம் வெளியான “கப்டன் மார்வெல்’ உள்பட, இதுவரை மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்சில் 21 படங்கள் வந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் “அவெஞ்சர்ஸ்’: எண்ட் கேம் மற்றும் இந்த ஆண்டின் மத்தியில் “ஸ்பைடர்-மேன்’: ஃபார் ஃப்ரம் ஹோம் வரவுள்ளன. மேலும் “கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’: வால்யூம் 3, “ப்ளாக் விடோ’, “தி எட்டர்னல்ஸ்,” ப்ளாக் பேன்தர்-2′ என சில படங்கள் தொடங்கப்படவிருக்கின்றன.

அதில் நிவேதா எந்தப் படத்துக்காக ஆடிஷன் செய்யப்போகிறார் என்பதை மார்வெல் நிறுவனத்தின் தரப்பிலிருந்து ரகசியமாக வைக்கச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு பல்கலை துணைவேந்தர் கொலை: பிள்ளையான் உள்ளிட்ட 4 பேர் மீது பொலன்னறுவ உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பிரதிவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்தின் கடத்தல், சித்திரவதை...

ரூ.20,000 இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சாய்ந்தமருது பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, ரூ. 20,000 இலஞ்சம்...

“தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது” – நடிகை அனன்யா ராஜ் மரணம் குறித்து குடும்பத்தினர் விளக்கம்!

நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ‘7 ஹவர்ஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்