பிறந்த குழந்தையை பார்க்க ஆண்கள் வார்ட்டுக்கு பார்க்க சென்ற ஹக்கீம்!

Date:

“உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு முன்னர் சஹ்ரான் குழுவுக்கும் ஹக்கீமுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. தேர்தலுக்கு அக்குழு உதவியுள்ளது” என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமே தெரிவித்தார்.

“சம்பவமொன்றில் காயமடைந்த சஹ்ரான் குழுவைச் சேர்ந்த ஒருவரை பார்ப்பதற்கு​ வைத்தியசாலைக்கு ஹக்கீம் சென்றிருந்தார். அந்த விவகாரம் தொடர்பில் தகவல்கள் கிடைத்தவுடன், அவரிடம் விசாரித்துள்ளனர்” என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றத்தில் தற்​போது நடைபெற்றுகொண்டிருக்கும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“வைத்தியசாலைக்குச் சென்றமை தொடர்பில் ஹக்கீமிடம் விசாரித்தபோது, பிறந்த குழந்தையொன்றை பார்ப்பதாகவே சென்றதாக பதிலளித்துள்ளார். ஹக்கீம் மட்டுமே, புதிதாய் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு ஆண்கள் வாட்டுக்குச் சென்ற ஒருவராவார்” என்றார்.

spot_imgspot_img

More like this
Related

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...

யாழ் விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இன்று நடந்த விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தில்...

ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்