முல்லைத்தீவு கடலில் உயிரிழந்த இளைஞனிற்கு 24ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது!

Date:

வவுனியா மரக்காரம்பளை பகுதியிலிருந்து நேற்றையதினம் சுற்றுலா சென்ற நிலையில் முல்லைத்தீவு நாயற்றுப் பகுதியில் இன்று நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் தொடர்பிலான மனதை உருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன..

மரக்காரம்பளையை சேர்ந்த இளைஞர்கள் நால்வர் நேற்றையதினம் முல்லைத்தீவு க்கு சென்ற நிலையில் இன்றையதினம் நாயாறு பகுதியில் நீராடியிருக்கின்றனர்.

அதன் போது, நீரோட்டத்தில் சிக்கிய நிலையில் மரக்காரம்பளையை சேர்ந்த கருணாரத்தினம் ஜெயசாந்தன் (29) என்ற இளைஞர் நீரில் மூழ்கிப் போன நிலையில் காணாமல் போயிருந்தார்.

கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் பின்னர் குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞருக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்ததாக குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

20 ஆண்டுகளின் பின் ஈராக்கிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கப்படை!

ஈராக்கில் உள்ள தங்கள் கடைசித் தளங்களிலிருந்தும் அமெரிக்கப் படைகள் புதன்கிழமைக்குள் வெளியேறத்...

‘நான் வெறும் டம்மிப்பீஸ்’: யாழ் நீதிமன்ற வழக்கில் கோட்டா சொன்ன தகவல்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய ஏறக்குறைய பத்து ஆண்டுகாலப் பகுதியில், எந்தவொரு...

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்