எத்தனை நாள் வீட்டுக்குள்ளேயே இருப்பது?; கொரோனா மரணங்களால் அழுது கொண்டிருக்காதீர்கள்: பிரேசில் ஜனாதிபதி!

Date:

கொரோனாவினால் ஏற்படும் இறப்புகளைப் பார்த்து அழுது குறை கூறுவதை நிறுத்துங்கள் என்று பிரேசில் மக்களிற்கு, அந்நாட்டு ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா அறிவுரை கூறியுள்ளார்.

பிரேசிலில் கொரோனாவால் ஏற்படும் இறப்புகள் இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 74, 285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட, 1,786 பேர் பலியாகினர். கொரோனாவினால் பலி அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா, இதற்கு பதிலளித்துள்ளார்.

ஜெய்ர் போல்சனோரா கூறும்போது, “ நீங்கள் எவ்வளவு காலம் குறை சொல்லி அழுது கொண்டு புலம்புவீர்கள். எவ்வளவு நாள் வீட்டிலேயே இருப்பீர்கள். இதனை யாராலும் இனி பொறுத்துக் கொள்ள முடியாது. நான் மரணத்துக்கு வருந்துகிறேன். இதற்கான தீர்வை விரைவில் கண்டுப்பிடிப்போம்” என்றார்.

உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேசத்தில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் : “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கை

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்