இன்று முதல் சிவ வாரம்!

Date:

சிவராத்திரி முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபை வருடா வருடம் கடைப்பிடிக்கும் சிவவாரம் 05/03 /2021 – 11/03/2021 முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொண்டு பணிகளுக்கு சிவதொண்டர்களை / சிவமங்கையர்களை இணைத்து கொள்ளும் வேலைத்திட்டம் முக்கியமாக இக்கால கட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு இரத்த தான முகாம்களையும் நலிவுற்ற குடும்பங்களை ஆற்றுப்படுத்தும் செயற்பாடுகளும் சைவ அறப்பணி நிதியத்தை வலுப்படுத்தல், சிவ தீட்சை , சிவலிங்கம் வழங்கல், அறநெறிப் பாடசாலைகளுக்கு உந்து சக்தி அளித்தல் செயற்பாடுகளும் சைவ மகா சபையால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இப்பணிகளுடன் உங்களை இணைத்து கொள்வதற்கு இச் சிவ வார காலத்தில் சிவ தொண்டர்களாக சிவமங்கையர்களாக உங்களை இணைத்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

6 – 10 வயதானோர் மழலைச் சிவதொண்டர்களாகவும் 10 – 18 வயதுக்கு மேற்பட்டோர் இளம் சிவதொண்டர்களாகவும் 18 வயதுக்கு மேற்பட்டோர் சிவ தொண்டர்களாகவோ சிவமங்கையர்களாகவோ இணைய முடியும்.

இவர்கள் குடி, புகை பழக்கம் அற்றவர்களாகவும் சமய சமூக ஒழுக்கங்களுக்கு விரோதமாக நடக்காதவர்களாகவும் ஒன்றே குலம் , அன்பே சிவம், என் கடன் பணி செய்து கிடப்பதே எனும் தேவார , திருமந்திரங்களை மகுட வாக்காக கொண்டு இயங்குதல் வேண்டும்.

புதிய சிவதொண்டர் / சிவமங்கையர் உங்கள் ஊர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று உறுதிப்பிரமாணம் ஏற்று சிவலிங்கதாரிகளாக தம்மை சிவ, மக்கள் தொண்டுகளிற்கு இறை சிவனின் அருளாசியுடன் அர்ப்பணிக்க முடியும்.

தங்களையோ பிள்ளைகளையோ இணைக்க விரும்பும் அன்பர்கள் அறியத் தாருங்கள் தொடர்புகட்கு மாவட்ட /பிரதேச இணைப்பாளர்களின் விபரம் அறியத் தரப்படும்.

பொதுத் தொடர்புகட்கு
0702373901

spot_imgspot_img

More like this
Related

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்