பி2பியை விட்டுவிட்டு, கதிர்காமத்திற்கு நடந்திருந்தால் புண்ணியமாவது கிடைத்திருக்கும்!

Date:

பொத்துவிலில் இருந்து பொலிகண்டிக்கு சென்றவர்கள், கதிர்காமத்திற்கு கால்நடையாக சென்றிருந்தால், முருகனை தரிசித்த புண்ணியமாவது மிஞ்சியிருக்கும். இப்போது ஒன்றுக்கும் உதவாத நடைபயணத்தை செய்துள்ளார்கள் என கிண்டலடித்துள்ளார் கருணா என அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன்.

அம்பாறை  மாவட்டம்  காரைதீவு பகுதியில் உள்ள   06 ஆலயங்களின் நிருவாகத்தினருக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி தேவையில்லாத ஒன்று. பொத்துவிலில் இருந்து பொலிகண்டிக்கு போகாமல், பொத்துவிலில் இருந்து கதிர்காமம் வரையில் நடந்து சென்றிருந்தால் முருகனை தரிசித்த புண்ணியமாவது கிடைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உதவும் இந்த காலகட்டத்தில் இதெல்லாம் தேவையா?  கண்டனப் பேரணி தேவையில்லாத ஒன்று என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்