இலங்கை தேசிய அணியில் விளையாடிய இரண்டு வீரர்கள் தற்போது அவுஸ்திரேலியாவில் பேருந்த சாரதிகளாக பணிபுரிகிறார்கள்.
ஒரு காலத்தில் இலங்கை அணியில் நம்பிக்கைக்குரிய எதிர்கால வீரராக கருதப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் சுராஜ் ரந்தீவ் மற்றும் துடுப்பாட்ட வீரர் சிந்தக்க ஜயசிங்க ஆகியோரே தற்போது பேருந்த சாரதிகளாக பணிபுரிகிறார்கள்.
2009 ஆம் ஆண்டில் இலங்கைக்காக சர்வதேச அறிமுகத்தை பெற்ற சூரஜ் ரந்தீவ்,
12 டெஸ்ட், 31 ஒருநாள் மற்றும் 7 ரி 20 போட்டிகளில் விளையாடினார். இலங்கை அணி 2011 கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆடிய போது, ரந்தீவும் அந்த அணியில் விளையாடினார்.
ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காகவும் ஆடினார்.
சிந்தக்க ஜயசிங்க 5 ரி 20 போட்டிகளிலும் ஆடினார்.
சுராஜ் ரந்தீவ் அண்மையில் அவுஸ்திரேலிய அணிக்கு வலைப்பயிற்சியில் பந்து வீச்சாளராகவும் பணியாற்றினார். தற்போது, அவுஸ்திரேலியாவில் பகுதி நேர பேருந்து சாரதியாக அவரும், சிந்தக்கவும் பணியாற்றி வருகிறார்கள்.
அவுஸ்திரேலிய பிக்பாஷ் தொடரில் விளையாடுவதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.