UPDATE: தந்தையை கொலை செய்த மகன் கைது!

Date:

தந்தையை தாக்கி கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகனை கிராம மக்களின் உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், நிலாவரை புத்தூர்- இராசபாதை வீதியில் நேற்று (28) இரவு இந்த கொலை சம்பவம் நடந்தது.

சீனிவாசம் (64) என்பவரே கொல்லப்பட்டார்.

அவரது 33 வயதான மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இன்று காலையில் சம்பவத்தை அறிந்த அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

பொலிசார் வருவதை அறிந்த மகன் வீட்டிலிருந்து தப்பியோடி விட்டார்.

பின்னர் கிராமமக்கள் அவரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். அவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

spot_imgspot_img

More like this
Related

‘பிக்பாஸ்’ பிரபலம் வர்ஷினி வெங்கட் கைது – பின்னணி என்ன?

ஆந்திர தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் பறித்த வழக்கில் ‘பிக்பாஸ்’ பிரபலம் வர்ஷினி...

எழுத்தாளர், தொழிற்சங்கவாதி மு.சிவலிங்கம் காலமானார்

மலையகத்தின் சிரேஷ்ட எழுத்தாளரும், இலக்கிய ஆளுமையும், தொழிற்சங்கவாதியும், கலைஞருமான மு. சிவலிங்கம்...

நுவரெலியா, ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாளை (25) பாடசாலைகளைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்