16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகிய விளையாட்டு பயிற்றுநர்

Date:

கிளிநொச்சியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை ஒன்றின் சிற்றூழியராக பணியாற்றும் ஒருவர் விளையாட்டு ஒன்றின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார். இவரிடம் குறித்த விளையாட்டு பயிற்சிக்காக சென்று சிறுவர்களில் 16 பேரை அவர் பாலியல் ரீதியாக துஸ்பிரயோத்திற்குள்ளாக்கியுள்ளார். குறித்த சிறுவர்கள் 10 தொடக்கம் 13 வயதுக்குட்டவர்கள் இவர்களை பயிற்றுவிப்பாளர் மலசல கூடத்திற்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளார்.

குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் சிலரின் நடத்தைகளில் மாற்றம் மற்றும் கல்வியில் திடீர் பின்னடைவு என்பவற்றின் அடிப்படையில் கவனம்செலுத்திய போது ஆரம்பத்தில் இரண்டு சிறுவர்கள் மூலமே விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட
போது குறித்த பயிற்றுவிப்பாளரால் 16 சிறுவர்கள் இவ்வாறு
துஸ்பிரயோகத்திற்குள்ளான அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனையடுத்த பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு அதனடிப்படையில் பொலீஸாரின் கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்றைய தினம் (11) கிளிநொச்சி பொலீஸ்
நிலையத்திற்கு பெற்றோர் மற்றும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களுடன் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர் சட்டநடவடிக்கை
மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை சந்தேக நபரை இதுவரை கைது செய்யாத பொலீஸார் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த புதன் கிழமை பாடசாலைக்கு சென்ற பொலீஸார் சிறுவர்களை மாலை 4 மணிவரை அறை ஒன்றில் அடைத்து வைத்துள்ளதோடு அவர்களை பொலீஸ் வாகனத்தில் பொலீஸ் நிலையம் ஏற்றிச்செல்ல முற்பட்டுள்ளனர். இதனால் சிறுவர்கள் பயத்தில் அழுதுள்ளனர்.மாலை நான்கு மணி வரை மதியம் உணவு கூட இன்றி சிறுவர்களை பொலீஸார் பாடசாலையின் அறை ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர்.

இதனையடுத்து பெற்றோர்கள் பொலீஸாருடன் முரண்பட்டுள்ளனர். தங்கள் பிள்ளைகள் குற்றவாளிகள் அல்ல அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் எனவே அவர்களின் உளவியலை புரிந்துகொண்டு பொலீஸார் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியோடு விசாரணைகளுக்காக பிள்ளைகளை தாம் பொலீஸ் அழைத்து
வருவதாகவும் பொலீஸ் வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்க முடியாது எனவும் தெரிவிக்கவே அங்கிருந்து பொலீஸார் விலகிச் சென்றுள்ளர்.

இந்தச் சம்பவம் பெற்றோர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு சிறுவர்களின் உளவியலை பாதிக்கும் வகையில் பெற்றோரை இந்த பிரச்சினையில் தாமாக விலகிக்கொள்ளும் வகையிலும் பொலீஸாரின்
நடவடிக்கைகள் அமைந்துள்ளது என்றும் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில்...

அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்

நாடளாவிய ரீதியில் மீண்டும்   சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறமையினால்  அம்பாறை...

உக்ரைன் விவகாரத்தில் புதின் நியாயமாகவே நடந்து கொள்கிறார்: ட்ரம்ப் பாராட்டு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூற்றுப்படி, ரஷ்யா "உக்ரைன் விவகாரத்தில் சரியாகவே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்