நாட்டிலுள்ள அனைத்து மக்களும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வயது, பாலினம், இனம், உடல் தோற்றம், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.
இன்று நினைவுகூரப்படும் ஜீரோ பாகுபாடு தினத்தை குறிக்கும் வகையில் ஜனாதிபதி ருவிற்றரில் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பதிவின் கீழ், கருத்திட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதியின் புத்திசாலித்தனத்தை பாராட்டியதோடு, ‘பேச்சை செயற்படுத்துவதற்கு இன்னும் தாமதமாகவில்லை’ என்றும் கூறினார்.
“வயது, பாலினம், பாலியல், இனம் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் கண்ணியத்துடன் வாழ்வதற்கான ஒவ்வொருவரின் உரிமையையும் பாதுகாக்க விரும்பும் அனைவரையும் துரோகிகள் என்று முத்திரை குத்தாமல் நாம் தொடங்க வேண்டும்” என்று சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Today is #ZeroDiscriminationDay.
As the president of #lka I am determined to secure everybody’s right to live life with dignity regardless of age, gender, sexuality, race, physical appearance, and beliefs.
— Gotabaya Rajapaksa (@GotabayaR) March 1, 2021