27.6 C
Jaffna
January 28, 2025
Pagetamil
உலகம்

கொரோனா கட்டுப்பாடுகளிற்கு எதிராக டென்மார்க்கில் ஆர்ப்பாட்டம்!

டென்­மார்க் தலை­ந­கர் கோபன்­ஹே­க­னில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள முடக்­க ­நி­லையை எதிர்த்து நேற்று சிலர் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடுபட்டவர்களில் எட்டு பேரை டென்­மார்க் போலி­சார் கைது
செய்­துள்­ள­னர்.

மேன் இன் பிளாக் எனும் அமைப்­பால் ஆர்ப்­பாட்­டம் நடத்­தப்­பட்­ட­தா­க­வும் அதில் ஏறத்­தாழ 1,200 பேர் ஈடு­பட்­ட­தா­க­வும் டென்­மார்க் பொலிஸார் கூறி­னர்.

கொரோனா தடுப்பு கட்­டுப்­பா­டு­களில் பல­வற்றை நீட்­டிப்­ப­தாக டென்­மார்க் அர­சாங்­கம் கடந்த வாரம் அறி­வித்­திருந்தது.

இதை­ய­டுத்து, முடக்கநிலையை எதிர்த்து முதல்­மு­றை­யாக அங்கு ஆர்ப்­பாட்­டம் நடந்துள்ளது. ஆர்ப்­பாட்­டம் பெரும்­பா­லும் அமை­தி­யான முறை­யில் நடத்­தப்­பட்­ட­து. இதில், மூர்க்­கத்­த­ன­மாக நடந்­து­கொண்­ட­தற்­கா­வும் சுடர்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­ய­தற்­கா­க­வும் எட்டு பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

முத­லில் 600 பேர் மட்­டுமே ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­தா­க­வும் ஆனால் மாலை நேரத்­திற்­குள் கோபன்­ஹே­கன் நகர மண்­ட­பத்­துக்கு முன்­பாக 1,000க்கும் மேற்­பட்­டோர் கூடி­ய­தா­க­வும் பொலிசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடுவிக்கப்படவிருந்த 8 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உயிரிழப்பு

east tamil

நைஜீரியாவில் பெற்றோல் தீப்பற்றி வெடித்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு

east tamil

சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் : 70 பேர் பலி

east tamil

சீனாவில் செயற்கை சூரியன் பரிசோதனை வெற்றி

east tamil

ரஷ்யாவில் மாபெரும் ட்ரோன் தாக்குதல்

east tamil

Leave a Comment