ஊடகவியலாளரை புகைப்படம் எடுத்து விபரங்களை கேட்டு அச்சுறுத்தல் விடுத்த வன வள திணைக்கள அதிகாரிகள்: முல்லைத்தீவில் சம்பவம்

Date:

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் செய்தி அறிக்கையிடலுக்காக சென்ற சுயாதீன ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனை வனவள திணைக்கள பெரும்பான்மை உத்தியோகத்தர்கள் மூவர் அச்சுறுத்திய சம்பவம் நேற்று (27)இடம்பெற்றுள்ளது.

தமது விவசாய நிலங்களை துப்பரவு செய்த கிராம வாசியை பௌத்த தேரர் ஒருவர்  அச்சுறுத்தி பொலிஸாரை அழைத்து தடை விதித்த சம்பவம் தொடர்பில் கிராம மக்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் அவ்விடத்துக்கு செய்தி சேகரிப்புக்காக சென்ற முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் காணிக்கு அருகில் உள்ள தண்ணிமுறிப்பு குமுளமுனை நீர்ப்பாசன திணைக்கள வீதியில் நின்று நடக்கும் சம்பவங்களை செய்தி அறிக்கையிடல் செய்து கொண்டிருந்த வேளை அவ்விடத்துக்கு வருகை தந்த முள்ளியவளை வட்டார மேலதிக வன அதிகாரி ரணசிங்க என்பவர் தனது தொலைபேசியில்  புகைப்படம் எடுத்ததோடு சக வன அதிகாரி இந்திரஜித் என்பவரோடு இணைந்து ஊடகவியலாளரிடம் பெயர் விலாசம் போன்ற தகவல்களை வழங்குமாறு கேட்டு பதிந்து விசாரணை செய்துள்ளனர். 

இதன்போது இவர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுத்த குறித்த ஊடகவியலாளர் தான் பத்திரிகையாளர் என்ற தனது அடையாளத்தை உறுதி படுத்தியதோடு வீதியில் நின்று கடமையில் ஈடுபடும் தன்னை வன திணைக்கள அதிகாரி புகைப்படம் எடுப்பதும் விபரங்களை கேட்டு பதிவதின் நோக்கம் என்ன என  கேள்வி எழுப்பியதோடு தனது கடமையை சுதந்திரமாக மேற்கொள்ள இடையூறு செய்ய அச்சுறுத்தல் விடுக்கும் நோக்கோடு விபரம் கேட்டு பதிவு மேற்கொள்ள என்னால் ஒத்துழைக்க முடியாது என கூறியதோடு நான் வீதியில் நின்றே கடமை  செய்கின்றேன் வன திணைக்களம் ஏன் என்னிடம் இவ்வாறு தகவல் கேட்க்கின்றீர்கள் நான் வன பகுதிக்குள் எங்கும் நுழைந்து செய்தி சேகரிக்கவில்லையே எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே மர கடத்தல் சம்பவம் ஒன்று தொடர்பில் குறித்த ஊடகவியலாளரும் இன்னொரு ஊடகவிகளாளரும் மர கடத்தலோடு தொடர்புடையவர்களால்  தாக்கபட்ட சம்பவம்  ஒன்று இடம்பெற்றிருந்தது . இந்த சம்பவத்தில் வனவள திணைக்களத்தை சேர்ந்த சில குறித்த இடத்தில் இருந்த அதிகாரிகளுக்கும் தொடர்புகள் இருந்த நிலையில் இந்த விவகாரம்  தொடர்பில் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில்...

அமெரிக்க- ஈரான் பேச்சில் முன்னேற்றமில்லை: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட உத்தரவிட்ட ட்ரம்ப்

இஸ்லாமாபாத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, ​​ஈரான் தனது அணுசக்தி லட்சியங்களைக்...

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்