உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை நேற்று (22) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேகவினால் 2019, செப்ரெம்பர், 21ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஜனக டி சில்வா தலைமையிலான 5 பேர் கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கை, கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீது, கடமை தவறிய குற்றச்சாட்டில் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யலாமா என்பதை ஆராய, அறிக்கையை உடனடியாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்புமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.