மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள செட்டிபாளையம் பிரதேசத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கெண்ட நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவரை சடலமாக இன்று (22) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செட்டிபாளையம் விளையாட்டு மைதான வீதியைவ் சேர்ந்த 26 வயதுடைய செனஸ்சங்கரி என்ற குடும்ப பெண்னே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் திருமணமாகி ஒருமாத காலம் ஆனநிலையில் சம்பவதினமான நேற்று (21) இரவு வீட்டின் முன்னாள் உள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1