செங்கலடி பொது சுகாதார பரிசோதகரை தாக்க முயற்சித்தவர் கைது!

Date:

மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதார பரிசோதகரை தாக்க முயற்சித்தவரை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தொரிவித்தனர்.

செங்கலடி தேவாலயம் ஒன்றினும் கொரோனா விழிப்புணர்வுக்காக சென்ற செங்கலடி பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.தவேந்திரராஜா அவர்களை தாக்க முயற்சித்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கலடி ரமேஸ்புரம் கணபதிப்பிள்ளை நகர்ப் பகுதியில் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளாகிய நபர் ஒருவர் இனங்கானப்பட்டுள்ளார். குறித்த நபர் செங்கலடி பஸ்தரிப்பு நிலையமொன்றிகும் சென்றிந்தமையினால் குறித்த பஸ் நிலையத்தின் அருகே காணப்படும் செங்கலடி மெதடிஸ்த தேவாலயப்பகுதியில் கொரோனா அச்ச பாதுகாப்பு விழிப்புணர்வு சம்மந்தமாக சென்ற பொதுசுகாதார பரிசோதர் மீது தேவாலயத்தினுள் வைத்து தாக்குதல் முயற்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தேவாலயத்தின் குருமுதல்வரோடு செங்கலடியில் பதிவான கொரோனா வைரஸ் தொடர்பிலும் அது தொடர்பான பாதுகாப்பு தொடர்பாகவும் பொதுசுகாதார வைத்திய பரிசோதகர் கலந்துரையாடிக்கொண்டிருக்கும் போது அங்கு சென்ற நபரொருவர் தேவாலயத்திலிருந்து பொதுச்சுகாதார பரிசோதகரை வெளியேறுமாறு தகாத வார்த்தைப்பிரியோகங்களினால் கூறியுள்ளதுடன் பரிசோதகரை தாக்கவும் முயற்சித்துள்ளார்.

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஏறாவூர் பொலிசார் குறித்த நபரை உடன் கைது செய்துள்ளனர்.

இரவு பகல் மழை வெள்ளம் பாராது கொரோனா அச்ச நிலமையிலும் தம்மை அர்ப்பணித்து சேவை செய்யும் இவ்வாறான அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு செய்வது கண்டிக்கத்தக்கதொன்றாகுமென அப் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்