தடை எனக்கு தரப்படவில்லை!

Date:

நீதிமன்ற கட்டளையை மீறி பொத்துவில் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கத்திடம் மாங்குளம் பொலிசார் நேற்றயதினம் விசாரணை மேற்கொண்டனர்.

முன்னதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அவருக்கு பொலிசாரால் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நேரமின்மையால் அங்குவர இயலாது என தெரிவித்திருந்தார்.

அதற்கமைய வவுனியாவில் அமைந்துள்ள ரெலோவின மாவட்ட அலுவலககத்துக்கு நேற்று வந்த பொலிசார் அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர்.

இதன்போது தமிழ் மக்களின் உரிமை கோரிய நியாயமான ஜனநாயக போராட்டத்தில் அவர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் மக்களோடு இணைந்து கலந்து கொண்டதாக விளக்கத்தை தெரிவித்திருந்தார்.

இதேவேளை நீதிமன்றின் தடை உத்தரவு பத்திரத்தை நான் எந்த சந்தர்ப்பத்திலும் பெற்றுக்கொள்ளவில்லை என்றும், அது எனக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் பொலிசாருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் வெளியான சுரேஸ் சல்லேவின் மருத்துவ அறிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காகக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு; 15 பேர் குற்றவாளிகள்: 9 பேர் விடுவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாகக்...

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்