கோவிட் -19 தடுப்பூசிகளை வாங்க சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை 10 மில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசிகளை வாங்கும் என்று அரச மருந்துகள் கழகம் தெரிவித்துள்ளது.
COVID-19 தடுப்பூசிகளை இந்தியாவில் இருந்து பெறுவதற்கான கொள்முதல் ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா திங்கள்கிழமை (15) ஒப்புதல் அளித்தார்.
திருத்தங்களுக்கு உட்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கொள்முதல் ஒப்பந்தம் இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்திற்கும் இந்திய சீரம் நிறுவனத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியா ஏற்கனவே 500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகளை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
COVID-19 தடுப்பூசி, ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்ட் தடுப்பூசி, சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவால் தயாரிக்கப்படுகிறது.