செல்வம் அடைக்கலநாதனிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்றனர்!

Date:

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்த பொலிஸார் பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்கு மூலத்தை பதிவு செய்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்த பொலிஸார் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலத்தை பெற்றுக்கொள்ள வருமாறு பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரிடம் பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்