27.7 C
Jaffna
November 3, 2024
Pagetamil
இலங்கை பிரதான செய்திகள்

ராஜபக்ஷவின் வெற்றிக்காக நுகேகொடை போராட்டத்திற்கு தலைமை தாங்கியமை தவறு என்றால் மன்னிப்புக்கோர தயார் – விமல்

மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக நுகேகொடையில் இடம்பெற்ற பேரணிக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவராக செயற்பட்டமை தவறு என்றால் மன்னிப்புக் கோர தயாராக இருப்பதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும் என விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து தொடர்பாக, மன்னிப்பு கோர வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீர்கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 2015 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக நுகேகொடையில் பெப்ரவரி 18 ஆம் திகதி இடம்பெற்ற பேரணிக்கு தன தலைமை தங்கியதாக குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர் பதவியில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே தான் இதனை கூயதாகவும் மாறாக மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவத்திலிருந்து விலக்க வேண்டும் என்பதற்காக பேசவில்லை என்றும் விமல் வீரவன்ச கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைவராக செயற்படும் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் கட்சியில் உயர் பதவி ஒன்றை வழங்கினால் தற்போதைய அரசியல் பலம் மேலும் வலுவடையக்கூடும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இராணுவத்தினருக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டளை

Pagetamil

தேசிய மக்கள் சக்திக்கு தமிழர்கள் வாக்களிப்பதால் ஏற்படவுள்ள பேராபத்து- பா.கஜதீபன் சுட்டிக்காட்டல்

Pagetamil

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைவுக்கு உண்மையான காரணம் என்ன?- வெளிப்படுத்துகிறார் த.சித்தார்த்தன்!

Pagetamil

அஸ்வசும பயனாளிகள் தெரிவில் அநீதிக்குள்ளானவர்கள் பற்றி ஆராய குழு நியமனம்!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment