தொழிலாளர்களது உரிமைகளை பாதிக்கும் வகையில் செயற்படும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை – அரசாங்கம்

Date:

பெருந்தோட்டத் தொழிலாளர்களது உரிமைகளை பாதிக்கும் வகையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் செயற்பட்டால், அதனை தடுக்கும் வகையிலான பொறிமுறைகளை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.

சம்பள நிர்ணய சபையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் அதனை ஏற்க முடியாது என்றும் 1000 ரூபாய் சம்பளம் சட்டமாக்கப்பட்டால் 13 நாட்களே தொழில் வழங்கப்படும் என்பதோடு, கூட்டு ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் என்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சார்பாக கலந்துகொண்டிருந்த ரொசான் ராஜதுரை எச்சரித்திருந்தார்.

இதுதொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய அமைச்சர் ரமேஸ் பத்திரன, “பெருந்தோட்டத்துறை நிறுவனங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்றுக்கு வரமுடியாத சூழ்நிலையிலேயே, சம்பள நிர்ணய சபையின் ஊடாக இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் அதனை நிறுவனங்கள் முறையாக அமுலாக்க வேண்டும்.

பெருந்தொட்டத்துறைகளில் பயன்படுத்தப்படாதிருக்கின்ற காணிகள் தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அவ்வாறான காணிகளை அடையாளம் கண்டு சரியான முகாமைத்துவ நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.0Shares

spot_imgspot_img

More like this
Related

ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களை கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஈரானின் உயர்மட்டப்...

சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைப்பு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ...

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நிராகரிப்பு

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்