நிவாரணப் பொருட்களுடன் வந்தது இந்தியாவின் ஐ.என்.எஸ் சுகன்யா கப்பல்

Date:

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல், திருகோணமலை மாவட்டத்தில் தற்போதைய அனர்த்த நிலைகளினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கு வழங்குவதற்கான 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று காலை 10 மணிக்கு திருகோணமலை அஸ்ரப் இறங்கு துறையை வந்தடைந்தது.

இக்கப்பலை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்ரா, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் சாய் முரளி,கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்தணசேகர,கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி ரவீந்திர திசேரா,மாவட்ட அரசாங்க அதிபர்,மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் இறங்கு துறையில் வைத்து வரவேற்றனர்.

இதனை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை கப்டன் முகுந்,இலங்கையின் கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவிடம் நிவாரண பொருட்களை இறங்கு துறையில் வைத்து ஒப்படைத்தார்.

“சமுத்திரத்தில் தோழமை” (சாஹர் பந்து) என்ற உதவித்திட்டத்தின் கீழ் உணவுப்பொருட்கள்,மருந்து பொருட்கள்,குடிநீர்,படுக்கை விரிப்புக்கள்,சுகாதார சுத்திகரிப்பு பொருட்கள்,உடைகள்,துவாய்கள்,பெண்களுக்கான சுகாதார துவாய்கள் கொண்ட இவ் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர்...

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்