மருத்துவபீட கொரோனா பரிசோதனை முடிவுகள்!

Date:

யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தின் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளில் 24 பேருக்கு தொற்று உறுதியானது.

இன்று 279 பேரின் பிசிஆர் மாதிரிகள் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டன.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்கள் கெருடாவில், தொண்டமானாறு பகுதிகளை சேர்ந்தவர்கள்.

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களில் 7 பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள்.

தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கு தொற்று உறுதியானது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.

யாழ் மாவட்டத்தில் 21 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களில் 12 பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள்.

இதுதவிர, வசாவிளான் தனிமைப்படுத்தல் மையத்தில் 3 பேருக்கு தொற்று உறுதியானது.

இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்திலும் கொரோனா பரிசோதனை இடம்பெற்றது. அத்துடன், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக அன்டிஜன் சோதனையும் இடம்பெற்றது.

spot_imgspot_img

More like this
Related

கன்னியா பகுதியில் விகாரை அமைக்க திட்டம்; தமிழ் மக்களின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்க வேண்டு

திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா...

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்