மன்னார் மாவட்டத்தில் சினோபார்ம் 2வது தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு

Date:

மன்னார் மாவட்டத்தில் கடந்த யூலை மாதம் சினோபாம் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு இன்று திங்கட்கிழமை(9) முதல் 2வது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம்,6 ஆம்,7 ஆம் திகதிகளில் சினோபாம் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கான 2 ஆவது தடுப்பூசி மன்னார் பிராந்திய சேவைகள் பணிமனை,மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து இன்று திங்கட்கிழமை (9) முதல் வழங்கி வருகின்றனர்.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு இன்று காலை 8 மணி முதல் மதியம் 5 மணி வரை மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் தடுப்பீசி செலுத்தும் நடவடிகை இடம் பெற்று வருவதுடன் பேசாலை சென் மேரிஸ் கல்லூரியிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது,

மேலும் இன்றைய தினம் மாலை 2 மணி முதல் 4.30 மணி வரை எருக்கலம்பிட்டி பிரதேச வைத்தியசாலை,மற்றும் தலைமன்னார் றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆகியவற்றில் சினோபாம் கொரோனா தடுப்பூசியின் 2வது தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்